தமிழ் மொழி விழா 2015

தமிழ் மொழி விழா 2015

 

வணக்கம்.

1. தாய் மொழி நாள்:

1999-ஆம் ஆண்டு ஐக்கிய நாட்டுச் சபையின் UNESCO எனப்படும் அமைப்பு பிப்ரவரி 21-ஆம் தேதியை உலகத் தாய் மொழி தினமாகப் பிரகடனப்படுத்தியது. அதன் அடிப்படையாவது:

“எந்த நாட்டில் வாழுகின்ற மக்களாக இருந்தாலும், அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தம் கருத்தை உறுதியாக உரைக்கவும், பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பேணவும், இன ஒற்றுமைக்குக் கருவியாகவும் அவரவர்க்கு இயற்கையாகவே அமைவது தாய் மொழி ஒன்றுதான்.”

2. தமிழ் மொழி விழா 2015:

மேற்கண்ட பிரகடனத்திற்கு ஏற்ப, தமிழ் மொழி விழாவை மலேசியத் தமிழ்ப் பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் பேரவை மூன்றாவது தடவையாக இந்த ஆண்டிலும் தொடர்ந்து நடத்த முடிவு செய்துள்ளது.

சங்கங்களின் பதிவு இலாகாவில் பதிவு செய்யப்பட்டு எமது பேரவையுடன் இணைந்துள்ள முன்னாள் மாணவர் சங்கங்களின் ஈடுபாட்டுடன் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி நடத்தபடும். இன்னும் பதிவு பெறாத அல்லது எமது பேரவையுடன் இணயாத சங்கங்கள், விரைந்து அதைச் செய்த பின்னர் நிகழ்ச்சியை நடத்தலாம்.

3. நாள் & இடம்

அ) மார்ச் – ஏப்ரல் மாதம் 2015
ஆ) சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடத்திலேயே நிகழ்ச்சியை நடத்துவது உசிதம்.

4. போட்டிகள்

தமிழ் மொழி விழா நான்கு போட்டிகளை உள்ளடக்கியிருக்கும்
:

அ) திருக்குறள்/மாறு வேடம்/புதிர் போட்டி
(ஏதாவது ஒன்று ) –3-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு
ஆ) வாசிப்புப் போட்டி – 4-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு
இ) கட்டுரை எழுதும் போட்டி – 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு
ஈ) பேச்சுப் போட்டி – 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு

5. திருக்குறள்/மாறு வேடம்/புதிர் போட்டி (ஏதாவது ஒன்று)

அ) இந்தப் போட்டி 3-ம் வகுப்பு மாணவர்களுக்கானது
ஆ) திருகுறள், மாறு வேடம் அல்லது புதிர் போட்டி – ஏதாவது ஒன்றை ஆ) சிரியர்கள் தேர்வு செய்து நடத்தலாம்.
இ) போட்டி விதி முறைகள், புள்ளி வழங்கும் விகிதம் போன்றவற்றை ஆசிரியர்களே முடிவு செய்யலாம்.

6. வாசிப்புப் போட்டி

அ) இந்தப் போட்டி 4-ஆம் மாணவர்களுக்கானது
ஆ) கொடுக்கப்பட்ட வாசகத்தைப் பிழையின்றி வாசிக்கவேண்டும்.
இ) நேரம்: 5 நிமிடங்களுக்கு மேற்போகாமல்.
ஈ) புள்ளிகள் வழங்கும் முறை:

1. உச்சரிப்பு .. .. 20 புள்ளிகள்
(உச்சரிப்புத் தெளிவு: ர, ற, ல, ள, ழ, ன, ண உச்சரிப்பு)
2. சரளம் (சிக்காத நடை) .. .. 10 புள்ளிகள்
3. தொனி (ஏற்றத் தாழ்வு, நிறுத்தக் குறி).. 10 புள்ளிகள்
4. உணர்ச்சி (உணர்வு வெளிப்பாடு, பாவனை).. 10 புள்ளிகள்
மொத்தம் 50 புள்ளிகள்

7. கட்டுரை எழுதும் போட்டி

அ) இந்தப் போட்டி 5-ஆம் மாணவர்களுக்கானது.
ஆ) கொடுக்கப்பட்டுள்ள ஒரு தலைப்பையொட்டி 180 சொற்களுக்குக்
குறையாமல் கட்டுரை எழுதப்படவேண்டும்.
இ) நேரம்: 45 நிமிடங்கள்.
ஈ) தலைப்பையொட்டி எழுதப்படாத கட்டுரைக்கு எந்தப் புள்ளியும்
வழங்கப்பட மாட்டாது.
உ) புள்ளி வழங்கும் முறை:

1. முன்னுரை, கருத்து, முடிவுரை .. .. 20 புள்ளிகள்
(குறைந்தது 4 கருத்துகள்)
2. கருத்துக் கோர்வை .. .. 10 புள்ளிகள்
3. மொழி, நடை .. .. 10 புள்ளிகள்
4. பத்தி பிரித்தல் .. .. 5 புள்ளிகள்
5. எழுத்துப் பிழையின்மை .. .. 5 புள்ளிகள்
(ஒரு பிழைக்கு ¼ புள்ளி வீதம் 20 பிழைகள்
வரை குறைக்கவும்) ———————-
மொத்தம் 50 புள்ளிகள்

8. பேச்சுப் போட்டி

அ) இந்தப் போட்டி 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது.
ஆ) கொடுக்கப்பட்டுள்ள ஒரு தலைப்பையொட்டி 7 நிமிடங்களுக்கு மிகாமல்
பேச வேண்டும்.
இ) உரை தலைப்பையொட்டி அமையாவிட்டால் எந்தப் புள்ளியும் வழங்கப்பட
மாட்டாது.
ஈ) புள்ளி வழங்கும் முறை:

1. விளிப்பு, கருத்து, முடிவுரை .. .. 25 புள்ளிகள்
2. உச்சரிப்பு .. .. 10 புள்ளிகள்
3. உணர்ச்சி, பாவனை .. .. 10 புள்ளிகள்
4. மொழி வளம் .. .. 5 புள்ளிகள்
(செய்யுள், பழமொழி பயன்படுத்துதல்) ———————-
மொத்தம் 50 புள்ளிகள்

(விளிப்பு: சபையோருக்கு வணக்கம் சொல்லி பேச்சை ஆரம்பித்தல்)

9. பரிசுகள்

ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து பரிசுகள் வழங்கப்படும்.

10. ஏற்பாட்டுப் பணிகள்

அ) வெற்றியாளர்களுக்கான பரிசுகள், நடுவர்களுக்கான நினைவுப் பரிசுகள், நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு மாணவர் மற்றும் ஆசிரியருக்குமான குறிப்பெடுக்கும் புத்தகம் (note book), ஆசிரியர்களுக்கும் 5 மற்றும் 6-ம் மாணவர்களுக்கான அறிமுகக் கையேடு ஆகியவற்றை பேரவை ஏற்பாடு செய்யும்.
ஆ) சிற்றுண்டி மற்றும் பதாகை (banner) ஆகிய இரண்டையும் சம்பந்தப்பட்ட முன்னாள் மாணவர் சங்கம் ஏற்பாடு செய்து அவற்றுக்கான செலவுத் தொகையை பேரவையிடமிருந்து பின்னர் பெற்றுக் கொள்ளலாம்.
# பதாகைச் செலவு: ரிம 150.00
# சிற்றுண்டி நபர் ஒருவருக்கு ரிம 4.00 வீதம்
இ) இட ஏற்பாட்டைச் செய்யவும், ஆசிரியர்கள் நடுவர்களாகப் பணியாற்றவும், மாணவர்களின் வருகையை ஊக்குவிக்கவும் பள்ளிக்கூட நிர்வாகத்தின் ஒத்துழைப்பு நாடப்படுகிறது.

11. நிகழ்ச்சி நிரல்

இந்த நிகழ்ச்சி நிரலை முன்மாதிரியாகக் கொள்ளலாம்:

காலை 8.30 மணி மாணவர்கள் வருகை
9.00 மணி போட்டி விளக்கம்
9.10 மணி போட்டியாளர்கள் ஆயத்தம்
9.30 மணி போட்டி ஆரம்பம்:
வகுப்பறை 1: திருக்குறள் 3-ஆம் வகுப்பு மாணவர்கள்
வகுப்பறை 2: வாசிப்புப் போட்டி 4-ஆம் வகுப்பு மாணவர்கள்
வகுப்பறை 3: கட்டுரை எழுதுதல் 5-ஆம் வகுப்பு மாணவர்கள்
வகுப்பறை 4: பேச்சுப் போட்டி 6-ஆம் வகுப்பு மாணவர்கள்
10.30 மணி இடைவேளை
10.45 மணி சொற்பொழிவு
11.30 மணி பரிசளிப்பு
12.00 ந.ப. நிறைவு

12. பிரதமர் துறை இலாகா ஆதரவு

அ) இந்த ஆண்டு நடத்தப்படும் தமிழ் மொழி விழா பிரதமர் துறை இலாகாவின் ஆதரவுடன் நடத்தப்படுகிறது.
ஆ) செலவினத்துக்கான விவரங்களும் நிகழ்ச்சி குறித்த அறிக்கையையும் பேரவைக்கு அனுப்பி வைப்பது மிகவும் முக்கியம்.

13. பதாகை (Banner)

அ) பதாகை செய்வதற்கு ரிம 150-.00க்கு மேற்போகாமல் இருக்கவேண்டும்.

ஆ) கீழ்க்கண்ட மாதிரியைப் பின்பற்றி பதாகையைத் தயாரித்து நிகழ்ச்சியன்று மாட்டி வைப்பது மிகவும் அவசியம்.

மலேசியத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்
சங்கங்களின் பேரவையின் ஏற்பாட்டில்

Jabatan Perdana Menteri ஆதரவுடன்

கோலப்பிலா தேசிய வகை தமிழ்ப் பள்ளியும்
முன்னாள் மாணவர் சங்கமும்

இணைந்து நடத்தும்

தமிழ் மொழி விழா

12 April 2015

14. நிகழ்ச்சி அறிக்கையும் செலவின ஏற்பும்

அ) சிற்றுண்டி மற்றும் பதாகை செய்வதற்கான செலவுத் தொகையை முன்னாள் மாணவர் சங்கம் முதலில் கொடுத்துவிட்டுப், பின்னர் பேரவையிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

ஆ) நிக்கழ்ச்சி நடந்து முடிந்த 14 நட்களுக்குள் செலவுத் தொகையின் விவரம், நிகழ்ச்சி குறித்த அறிக்கை பேரவைக்கு அனுப்ப வேண்டும். (பாரங்கள் TMV 08/15 மற்றும் TMV 06/15 பயன்படுத்தவும்).

இ) அறிக்கையுடன் நிழற் படங்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்து அனுப்புவது சிறப்பு.

15. மேல் விவரங்கள்

அ) மேற்கண்ட சுற்றறிக்கையில் சில விளக்கங்கள் விடுபட்டிருக்கலாம். பள்ளிக்கூட நிர்வாகமும் முன்னாள் மாணவர் சங்கமும் கூடிப் பேசி முடிவெடுக்கலாம்.

ஆ) பேரவையிடமிருந்து விளக்கங்கள் பெற விரும்பினால், கீழ்க் கண்டவர்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

இ) தலைவர்: திரு சி. இராஜரத்தினம் கைப்பேசி 012-2157491
துணைத்தலைவர்: திரு வெ. இராமகிருஷ்ணன் கைப்பேசி 019-2307184
செயலாளர்: திரு இளங்கோ இராஜசிங்கம் கைப்பேசி 012-3255980

16. மாணவர்களின் உற்சாகமே பிரதானம்::

இந்த நிகழ்ச்சி ஒரு பரீட்சை அல்ல. தமிழ் மொழியின்
வளர்ச்சிக்காக மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பதே பிரதானம்

நன்றி, வணக்கம்.

அன்புடன்,

சி. இராஜரத்தினம்
தலைவர்

PERTAMA

தலைவர் எண்

(+6) 012 - 2157 - 491

செயலாளர் எண்

(+6) 013 - 3615 - 575

மின்னஞ்சல் முகவரி

அலுவலக முகவரி

தேசிய வகை தமிழ்ப்பள்ளி பங்சார், மலேசியா

பயனுள்ள வலைத்தள இணைப்புகள்

2024 Copyright - All Rights Reserved PERTAMA (12345678-A)
வலைதளம் வடிவமைத்தது - G Angle Tech | Web Design Selangor